எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Wednesday, February 29, 2012

கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு . வின்சென்ட் பால்ராஜ், சுற்றுச்சூழல் மீதுள்ள அதீத ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய வங்கி அதிகாரி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின் தனது வாழ்க்கையை இயற்கையோடு இணைந்த முறையில் அமைத்துக் கொண்டுள்ளார்.வால்பாறையில் இவரது வீட்டை சுற்றி காய்கறிகள் பயிரிடப்பட்டும், கோழிகள், வாத்து போன்றவை வளர்க்க பட்டும் இருப்பதால் சிறு வயதில் இருந்தே இயற்கையின் மீது பாசம் கொண்டுள்ளார். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் உண்டு வளர்ந்து வந்தவருக்கு கோயம்புத்தூரின் வாழ்க்கை சிறிது வித்தியாசம் காட்டவே வேலையை விட்ட பின்னர் நிலத்தை விலைக்கு வாங்கி தோட்டங்கள் அமைத்து, காய்கறிகளை பயிரிட்டு என பசுமையான வாழ்விற்கு மாறி கொண்டுவிட்டார்.

சுற்றுபுறச்சூழல் , மழைநீர் சேகரிப்பு, இயற்கை இடுபொருட்கள், மரம் வளர்ப்பு ,இயற்கை விவசாயம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்,

வெட்டிவேர் ஆராய்ச்சி

இவரது வெட்டிவேர் பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியமானவை. உலக அளவில் வெட்டிவேர் குறித்த ஆராய்ச்சியில் குறிப்பிட தகுந்த இடம் இவருக்கு இருக்கிறது. பல மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். கடந்த அக்டோபரில் லக்னோவில் நடந்த உலக வெட்டிவேர் மாநாட்டில் கலந்து கொண்டு சரிவுகளில் வெட்டிவேரை பயன்படுத்தி நீரை சேமிப்பது எப்படி என்ற நுட்பத்தை திரையில் போட்டு காட்டி மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரின் பாராட்டை பெற்று இருக்கிறார்.

மாநாட்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது இங்கே தமிழில்...!பிரேசில் நாட்டில் கடலோரத்தில் நடப்பட்டு, 
வளர்ந்த நிலையில் வெட்டிவேர்


பிரேசில் நாட்டில் வெட்டிவேரை பயன்படுத்தி கடலரிப்பில் இருந்து குடியிருப்புகளை காப்பாற்றி இருப்பது அறிந்து ஆச்சர்யமாக இருக்கிறது. நமது வெட்டிவேரின் பயன் என்ன என்பதை வெளிநாட்டினர் நன்கு புரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் நாம் ?!!

இவரது தளம்

இவரது பதிவுகள் அனைத்தும் நம் பூமியை பாதுக்காப்பதை பற்றியதாகவே இருக்கும் அதிலும் விவசாயத்தை கெடுக்க கூடிய காரணிகள் யாவை என்பதை பற்றிய கவலை இவரது பதிவை படிக்கும் போது தெரியும்.ஆதாரங்களுடன் சில செய்திகளை சொல்லும் போது ஆச்சர்யபடாமல் இருக்க இயலாது.

விகடன் வரவேற்ப்பறையில் இவரது தளம் இரண்டு முறை அறிமுக படுத்த பட்டு இருக்கிறது.

இவரது பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக...

* சில ஆப்ரிக்க நாடுகளில் குறைவாக பொழியும் மழை நீரை வைத்தே சிறப்பாக இயற்கை விவசாயம் நடை பெறுகிறது...இந்த விவரங்களை அங்கே விவசாய கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை திருமதி மஞ்சுளா அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால், அதன் விவரங்களை பற்றி தனது தளத்தில் சிறிது எழுதி இருக்கிறார். அந்த விவசாய முறை பற்றி தெரிந்து கொள்ள,

அதன் இணைப்பு

* மின் பற்றாகுறையால் நாடே தடுமாறிகொண்டிருக்கிறது...தாவர கழிவுகளை வைத்து மின்சாரம் தயாரிக்கபட்டு கொண்டிருப்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...14 மின் உற்பத்தி நிலையங்கள் நம் தமிழ் நாட்டில் இருக்கிறதாம். அது என்ன மரஎரிசக்தி மின்சாரம்...? இதனை பற்றிய சிறு விளக்கம் கொடுக்கிறார், படிங்க...

அதன் இணைப்பு

* சீமை கருவேல மரம் பற்றிய தனது கருத்துக்களை விரிவாக பதிவிட்டவர், பதிவின் இறுதியில் முத்தாய்ப்பாக இவ்வாறு சொல்லி இருப்பார்,

"சுற்றுச்சுழலையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகம் என்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்"

அதன் இணைப்பு

* மேலும் வேறு சில தாவரங்களும் நம் மண்ணை கெடுத்து கொண்டிருக்கின்றன...விளை நிலங்களில் சீமை கருவேல மரத்துக்கு அடுத்த படியாக அதிகம் வளர்ந்திருக்கும் ஒரு களை தாவரம் பார்த்தீனியம் ! இதனால் ஆஸ்துமா, தோல் நோய் நமக்கு வர வாய்ப்பு உண்டாம் !! இன்னும் நிறைய சொல்கிறார்...அதனை அழிக்கும் முறை பற்றிய தீர்வையும் தருகிறார்...

அதன் இணைப்பு

பார்த்தீனியம் தாவரம் தொடர்பான தகவல்களும் பசுமை விடியல் சார்பாக ஒரு புறம் திரட்டபடுகிறது...! விரைவில் இதனை பற்றிய நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்...

நம் விளை நிலத்தை பாதுகாப்போம், விவசாயம் சிறப்பாக நடைபெறுவது தான் ஒரு நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டுசெல்லும். விவசாயிகளுக்கு பல்வேறு விதமான இடைஞ்சல்கள், அதில் இந்த தாவரங்கள் ஒரு புறம்...இவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும்... விவசாயத்தை கெடுக்க கூடிய தாவரங்களை அழித்தொழிக்கவேண்டும்.

இயற்கையை அதிகம் நேசிக்கும் இவருடன் பசுமைவிடியல் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறது.பசுமை விடியலின் செயல்பாடுகளில் திரு . வின்சென்ட் பால்ராஜ் அவர்களின் அனுபவத்துடனான சீரிய ஆலோசனைகளும் முக்கிய இடம் பெறும் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.0 comments: