எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Tuesday, February 28, 2012
திருநெல்வேலியில் 25-02-2012 அன்று பத்திரிக்கையாளர்கள் சங்கம், பெண்கள் கூட்டமைப்பு  மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய கூட்டத்தில் முக்கிய விசயமாக தாமிரபரணி நதி சுத்தபடுத்துவதை பற்றி விவாதிக்கப்பட்டது. 

பின்னர் அனைவரும் இணைந்து இதற்கென ஒரு கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறினார். அதன்படி முதலில் செயலாளர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர்.தலைவர், பொருளாளர், துணை செயலாளர் என தேர்ந்தெடுக்கபட்டனர். இந்த அமைப்பிற்கு தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் என பெயரிடப்பட்டது. முதல் களப்பணி அடுத்த மாதம் 10 ஆம் தேதி அன்று (நதி ஓடிவரும் ஒரு பகுதி) விக்கிரமசிங்கபுரத்தில் செயல்படுத்த படுவதாக ஒரு மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இந்த அமைப்புடன் தன்னை இணைத்து கொண்டது 'பசுமைவிடியல் இயக்கம்' . நதியை சுத்தபடுத்தும் களப்பணியில் நமது பங்கும் இருக்கும் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம். பசுமைவிடியல் சார்பில் திருமதி. கௌசல்யா மற்றும் நெல்லையில் இருக்கும் 'பசுமை விடியல்' தன்னார்வலர் திரு.நாகராஜன் அவர்களும் கலந்துகொண்டார்.    


2 comments:

Asiya Omar said...

நல்ல செய்தி.பாராட்டுக்கள்.களப்பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.