எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Monday, May 7, 2012
வெண்நுணா அல்லது நோனி அல்லது இந்தியன் மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும்.





தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர் : வெண்நுணா,
மற்ற பெயர்கள் : இந்தியன் மல்பெரி



மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம். ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும் என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்



பரவலாக தமிழகத்தில் காணப்படும் “மஞ்சநத்தி” என்று அழைக்கப்படும் Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதனை உணவாகவும் உண்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது

 “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி - மரவளம்

3 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

// மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள்.//

என்ன நோய்கள் என்று சொல்லி இருக்கலாம். கட்டுரை மிகவும் மேலோட்டமா எழுதபட்டது போல் உள்ளது. நன்றி! வணக்கம்!

nagaa said...

இங்கு வாருங்கள் நோய்களின் பட்டியலும் நோனி கிடைக்கும் இடமும் தெரியும்
http://bosskevanoni.blogspot.in/

nagaa said...

நோய்களின் பட்டியலும் நோனி கிடைக்கும் இடமும் அதன் மூலம் வருமானமும் அறிய
http://bosskevanoni.blogspot.in/
வாருங்கள், நன்றி.