எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Tuesday, April 17, 2012
நம் அனைவருக்கும் செடி, மரம் சூழ்ந்த ஒரு இடத்தை / வீட்டை பார்த்தா ஒரு சந்தோசம் வரும்...நம்ம வீட்லையும் இந்த மாதிரி பசுமையா இருந்தா எப்படி இருக்கும் என்று ஆசை படும் பலரது வீடுகளில் மரங்கள் இருப்பதில்லை...காலி இடங்கள் இருந்தும் மரங்களை நடுவதற்கு அதிகம் யோசிப்பார்கள்...

ஒரு காரணம் என்னவென்றால் சரியாக தண்ணீர் விட்டு பராமரிக்க முடியாது என்பதுதான்..அதுவும் இந்த கோடை காலத்தில் ரொம்பவே சிரமப்படணும்...விருப்பப் பட்டு அதிக மரங்கன்றுகளை நட்டுவிட்டு ஒவ்வொன்றுக்கும் தண்ணீர் விட இயலாமல் அது வாடி போவதை வேதனையோடு பார்க்கவேண்டியதாக இருக்கும்.

மரங்களை வளருங்கள் என்று பல தொண்டு நிறுவனங்கள் மரக்கன்றுகளை பல இடங்களிலும் வைத்து வருகிறது...வைப்பது மட்டும் முக்கியம் இல்லை. அதை தொடர்ந்து பராமரிக்கவேண்டும், அப்போதுதான் அச்சேவை முழுமை பெறும். இதற்க்கு எல்லாம் தீர்வு சொல்வது போல திரு வின்சென்ட் சார் ஒரு ஆலோசனை கூறினார். அதனை பசுமைவிடியல் வாசகர்களுக்காக இங்கே விளக்குகிறார்...என்னவென்று தான் படித்து பாருங்களேன்...விரைவில் உங்கள் வீடும், தெருவும்,ஊரும் பசுமையால் குலுங்க தொடங்கலாம்...வாழ்த்துகள்...

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும்
இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டிஅதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும்.


கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது.
நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும்.
நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும்.

நன்றி - மரவளம்
திரு.வின்சென்ட் சார்.

பசுமை விடியல் தளத்தில் இனி தொடர்ந்து மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், நடவேண்டிய நல்ல மரங்கள் எவை எனவும், வீட்டு தோட்டம், மொட்டை மாடி தோட்டம் போன்றவற்றை குறித்தும் பகிர இருக்கிறோம்...


பூமி எங்கும் பசுமையால் நிறையட்டும்...!


3 comments:

மகேந்திரன் said...

இலகுவான முறையில் மரம் நடுவதைப் பற்றி
நல்ல பதிவு சகோதரி..
தொடருங்கள் பசுமைப் பணியை...

koodal bala said...

நல்ல யோசனை !

அமுதா கிருஷ்ணா said...

மொட்டை மாடி தோட்டம் பற்றிய் தொடரை படிக்க ஆவ்லாய் உள்ளேன்.