எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Thursday, February 16, 2012
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று, எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமோ அதை தற்போது அனுபவித்து கொண்டிருக்கிறோம். இந்த மகிழ்ச்சியை கொடுத்தவர்கள் முகநூல் நண்பர்கள் ! எதற்காக பசுமைவிடியல் இயக்கம் ஏற்படுத்த பட்டது என்பதை சிலர் அறிவார்கள்...இப்போதோ பலரும் அறிய தொடங்கிவிட்டார்கள்...புயல் வேகத்தில் சில மணித்துளிகளில் 800 க்கும் மேற்பட்டவர்கள் 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்...!! இது போன்ற ஒரு சந்தர்ப்பதிற்க்காகத் தான் இத்தனை நாள் காத்திருந்தேன்...





எனது இரண்டு வருட தவம் இது...!! இன்னும் சொல்லபோனால் சீமை கருவேலமரத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு 15 வருடங்கள் ஆகிறது...!  2010 ஜூலை  மாதத்தில் மரங்களை வெட்டுங்கள் பதிவை எழுதினேன்...! அப்போதில் இருந்து இன்று வரை இம்மரத்தை பற்றியே தான் என் எண்ணம் முழுவதும் இருக்கிறது...திருநெல்வேலியில் எங்கு பார்த்தாலும் இம்மரங்களின் அதீத ஆக்கிரமிப்பு தான்...

இம்மரத்தை அழித்தொழிக்க வேண்டி பல ஆதாரங்களையும், தகவல்களையும் திரட்டி வந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் ஒழிப்பதற்கு முயன்றேன்...ஆனால் இயலவில்லை. இதனை ஒரு இயக்கமாக செயல்படுத்தினால் தான் இதில் வெற்றி பெற முடியும் என முடிவு செய்தேன்.


ஆகவேதான் தற்போது 'பசுமைவிடியல்' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ISR. selvakumar, prabu krishna, suryaprakash,shajahan sherif போன்ற சமூக அக்கறை கொண்டவர்களுடன் இணைந்து துவக்கி உள்ளேன். பலரது ஒத்துழைப்பு இல்லை என்றால் இதனை செயல்படுத்த முடியாது என்பதை நன்கு புரிந்து கொண்டதால் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களையும்  சேகரித்து சேர்த்து கொண்டு வருகிறோம்...


பல கட்டங்களில் இதனை கொண்டு செல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு நடந்தேறி கொண்டு வருகிறது...அதில் ஒரு கட்டமாக குறும்படம் ஒன்றும் எடுத்து கொண்டிருக்கிறோம்...அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும் ஒரு புறம் ஏற்பாடுகள் செய்து கொண்டு வருகிறோம்...


இத்தகைய நிலையில் முகநூலில் பலரும் இதனை பகிர்வது கண்டு உவகை அடைந்தோம்...மேலும் பலரும் ஆர்வமாக நாங்களும் வெட்ட போகிறோம் என்று சொன்னது சமூகத்தின் மேல அவர்களுக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது என மகிழ்கிறேன்...ஏற்கனவே நாங்கள் இதற்காக சகல விதங்களிலும் முயன்று கொண்டிருப்பதால் உங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்தால் இம்மரத்திற்கு எதிரான கைகள் கூடும் அல்லவா...?

இந்த நேரத்தில் இதை முக நூலில் பகிர்ந்த நண்பர் சசிதரன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது எங்கள் கடமை. அத்தோடு இதை பகிர்ந்த மற்றவர்களுக்கும் எங்களது நன்றிகள். 



தாமதிக்காமல் நமது மண்ணின் மாண்பை காக்க கை கொடுங்கள், இணையுங்கள்...சீமை கருவையை வேரறுப்போம் !!

எங்களுடன் இணைய இங்கே செல்லவும் http://www.pasumaividiyal.org/p/6.html 

கௌசல்யா
பசுமைவிடியல் நிர்வாகம் 


18 comments:

வின்சென்ட். said...

Please contact Bio Energy Company near your area(திருநெல்வேலி). They are buying it.

shajahan said...

Thank you so much Mr.Vincent for your ideaS. We will surely meet them and consult about the process. Keep visiting our page and support us.

கணேஷ் said...

இந்த மரங்கள் மண்ணுக்கு தீமை விளைவிக்கும் என்பதுக்கு ஏதாவது சரியான அதாரம் இருந்தால் தயவு செய்து கொடுக்கவும்.

அதே நேரத்தில் இதை உண்பதால் ஆடு மாடுகள் உயி இழக்கின்றன எண்பதுக்கும் ஆதாரம் வேண்டும்.இருந்தால் கொடுங்கள்.

கணேஷ் said...

நீங்கள் உங்கள் பதிவில் கொடுத்து இருந்த இணைப்போடு நானும் பல இடங்களில் தேடியும் பார்த்துவிட்டேன் நீங்கள் சொல்லியிருக்கும் தீவிர தீங்குகள் இந்த மரத்தினால் இல்லை என்றே தோன்றியது.

நான் படித்தது பெரும்பாலும் இந்தியாவின் விவசாய ஆய்வு கட்டுரைகள். நீங்கள் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதை எழுதி உள்ளிர்கள் அறிய வேண்டும்.

படித்தவரை அந்த மரங்கள் பற்றி நல்ல தகவலே கிடக்கபெற்றேன்.

அப்படி என்றால் நீங்கள் பலமுறை பகிரபட்டதாக சொல்லும் தகவல் எந்த அடிப்படையில் எழுதபட்டது?

Prabu Krishna said...

@ கணேஷ்

வணக்கம். இந்த மரத்தின் இலையை உண்பதால் ஆடு,மாடுகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்ற போதிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கும். எந்த விவசாயியும் இதனை அதிகமாக தன் ஆடுகள் தின்ன அனுமதிப்பது இல்லை. ஆடுகளும் பெரும்பாலும் இதன் பழத்தை மட்டுமே உண்ணும.(ஒரு விவசாயியின் மகன் என்ற முறையில் இது நான் பார்த்தது).

அடுத்து இதில் தீங்கு இல்லை என்று எந்தக் கட்டுரைகளை வைத்து சொல்லி உள்ளீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதன் தீமைகள் குறித்து நிறைய கட்டுரைகளை இணையத்தில் நீங்கள் காணலாம்.

Invasion of prosopis juliflora and local livelihoods

சீமைக் கருவேலம்

Invasion of prosopis juliflora and local livelihoods

Vilayati babul (or kikar) a silent botanical disaster

Prosopis juliflora

முக்கியமாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் நிலத்தை பாழ்படுத்துகிறது, மாற்ற தாவரங்களை வளர விடாமல் செய்கிறது. அவை உண்மையே.

நீங்கள் கண்ட நல்ல தகவல்களை இங்கே பகிரலாமே?

கணேஷ் said...

தகவலுக்கு நன்றி..

பொதுவாக இந்த இலையை ஆடு,மாடுகள் உண்பதில்லை. என்னால் உறுதியாக சொல்ல முடியும்.நானும் மேய்த்து இருக்கிறேன்

இதன் காய் அல்லது நெத்து என்பதைத்தான் அவைகள் விரும்பி உண்ணும். இது அவைகளுக்கு சில நேரங்ககளில் சிறந்த தீணியும் கூட.

அடுத்து கட்டுரைக்கு வருவோம் ஒரே கட்டுரையை இரண்டு முறை கொடுத்து இருக்கிறிர்கள் என்று நினைக்கிறேன், படித்து பார்த்து இருக்கலாம். ))

முதலாம் கடஊரை ஏற்க்கனவே நான் படித்தது. அதில் முக்கியமாக பக்கங்கள் 28,33,37, 46 படியுங்ககள். இதன் நன்மைகள்.

அடுத்து 40 பக்கம் சில தீமைகள். அதுவும் ஆட்டின் பல் சொத்தையாகிறது இதில் இருந்து வரும் கோந்து அல்லது பிசின் போன்ற பொருளால் அடுத்து இதன் இலைகள் தண்ணீரில் விழுவதால் மாசு இதுதான் பெரியத சொல்ல பட்டு இருக்கிறது.

பொதுவாக இதனால் வரும் பிரச்சினை என்றால் நான் படித்த கட்டுரைகளில் இருந்து விலை நிலங்களில் இது வளர்ந்தால் மற்ற பயிர்கள் பயிரிட பிரச்சினையாக இருக்கும் என்பதே தவிர நிலத்தை அப்படியே பாழாக்கும் என்பது தவறு.

அதுவும் எந்த விவாசாயியும் இதனை தனது காட்டில் வளர அனுமப்திப்பதே இல்லை. இருந்தாலும் இது வளரும் காரணம் அவர்கள் இடும் இயற்க்கை உரம் அதாவது ஆடு மாடுகளின் கழிவு. அவை இதனை உண்பதால் அதான் விதைகள் இங்கு விழுந்து விலை நிலங்களில் இது வரும். அதியும் விவசாயி பிடுங்கி விடுவார். (நானும் செய்து இருக்கிறேன்)

மற்றபடி உலக அளவில் இது வறண்ட மற்றும் எல்லா செடிகள் வளரமுடியாத இடங்களில் வளைந்து நன்மை பயக்கிரதே தவிர வேறேதும் தீமை இல்லை.

அதை பற்றி விளக்கமாக ஆதாரத்தோடு இங்கே சொல்கிறேன் அதாவது மண்ணில் இந்த மரம எவ்வாறு நன்மை பாக்கிறது என்று

அடுத்து இரண்டவாது கட்டுரை அது குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்து நில அமைப்பை பற்றியது. அதிலும் கடைசியில் பாருங்கள் அல்லது இது சம்பந்தமாக இனிப்பை அடுத்து கொடுக்கிறேன். அது புளிதி புயலை தடுத்து அங்கு இருக்கு உப்பு மற்றும் உவர நிலங்களில் வளர்ந்து பெரும் பயனையே அழிக்கிறது.

மற்ற இணைப்புகளில் நீங்கள் இங்கே சொல்லி இருக்கும் தீவிரம் ஆதாரத்தோடு இல்லை

கணேஷ் said...

சார் இன்னும் எனக்கு நிறைய சந்தேகங்கள் இதன் மீது இருக்கிறது. எனது சந்தேக கருத்துக்களை ஆதாரத்தோடு இங்கே இட என்னுடைய முன் கருத்துக்கள் தேவை. ஏனென்றால் சொன்ன விசயத்தையே திரும்பவும் சேர்க்காமல் இருக்க உதவும். அதனால் முடிந்த அளவு விரைவாக வெளியிடுங்கள் அல்லது moderation எடுத்து விட்டால் நான் கருத்துகளை பதிவு செய்ய உதவியாக இருக்கும்..

Prabu Krishna said...

நீங்கள் சொன்னபடி அதன் பலன் என்று பார்த்தால் வெறும் விறகு என்ற ஒரு பலன் தான்.

//நான் படித்த கட்டுரைகளில் இருந்து விலை நிலங்களில் இது வளர்ந்தால் மற்ற பயிர்கள் பயிரிட பிரச்சினையாக இருக்கும் என்பதே தவிர நிலத்தை அப்படியே பாழாக்கும் என்பது தவறு.//

ஒரு மரம் முழுமையாக வளர்ந்த பிறகு அந்தக் காட்டில் யார் பயிரிட முடியும்? அப்போது அதன் அர்த்தம் என்ன?

//அதுவும் எந்த விவாசாயியும் இதனை தனது காட்டில் வளர அனுமப்திப்பதே இல்லை. இருந்தாலும் இது வளரும் காரணம் அவர்கள் இடும் இயற்க்கை உரம் அதாவது ஆடு மாடுகளின் கழிவு. அவை இதனை உண்பதால் அதான் விதைகள் இங்கு விழுந்து விலை நிலங்களில் இது வரும். அதியும் விவசாயி பிடுங்கி விடுவார். (நானும் செய்து இருக்கிறேன்)
//

இதன் அர்த்தம் என்ன? தீமை இல்லாவிட்டால் ஏன் பிடுங்கி எரிகிறார்கள்? மரம் ஆகிவிட்டால் அந்த இடம் வீணாகிவிடும் என்று தானே?

//
மற்றபடி உலக அளவில் இது வறண்ட மற்றும் எல்லா செடிகள் வளரமுடியாத இடங்களில் வளைந்து நன்மை பயக்கிரதே தவிர வேறேதும் தீமை இல்லை.//



//அடுத்து இரண்டவாது கட்டுரை அது குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்து நில அமைப்பை பற்றியது. அதிலும் கடைசியில் பாருங்கள் அல்லது இது சம்பந்தமாக இனிப்பை அடுத்து கொடுக்கிறேன். அது புளிதி புயலை தடுத்து அங்கு இருக்கு உப்பு மற்றும் உவர நிலங்களில் வளர்ந்து பெரும் பயனையே அழிக்கிறது.//


இது இந்தியாவில் தோன்றிய பயிரே இல்லையே? வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது தானே? அதுவும் விறகு என்ற ஒரு பலனுக்கு. இது போன்ற சிறிய பலன்களை எதிர்பார்த்து இன்று விளைநிலங்கள் கூட விளையாத நிலமாகி விட்டது.

மறுபடி சொல்கிறேன் இந்த மரம் வளர்ந்த பின் அந்த பகுதி மட்டும் விவசாயியால் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுகிறது. பின்னர் அதிக நீரை உறிஞ்சும் ஒரு செடி ஓராயிரம் விதைகளை உருவாக்கி மேலும் தீமையைத் தருகிறது.

கணேஷ் said...

சரி இனி கருத்துகள்
http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/Prosopis-PolicyBrief-2.pdf

இந்தி இணைப்பை பாருங்கள். வேலி மரத்தின் நன்மையையும் அதான் எவ்வாறு வழமையாக வளர்க்கலாம் என்பதுக்கு அரசு திட்டம் தீட்டுவதோடு உதவியும் செய்கிறது.

அடுத்து நீங்கள் கூறும் மண்ணை பாழாக்கும் விஷயத்துக்கு வருவோம்..

முதலில் உங்களிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை இது மண்ணை கெடுக்கிறது என்று.
http://pub.uasd.edu/ojs/index.php/kjas/article/viewFile/354/339

இந்த இணைப்பில் பாருங்களேன் எல்லாமே இந்த மரம் எப்படி மண்ணில் உள்ள உப்பு அமிலத்தன்மையை நீக்கி மண்ணை வளமாக்கி விடுகிறது என்பதை ph அளவோடு அட்டவணை படுத்தி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்தமாதிரி ஆதாரத்தோடு இது மண்ணை கெடுக்கிறது என்பதை விளக்குங்கள் நான் நம்புகிறேன்.

இன்னும் தருகிறேன் அதற்கு முன் சில பொதுவான விசயங்கள் உங்களின் பார்வைக்கு

அதோடு இதன் கீழே செடி கொடிகள் வளராது என்பது அபத்தம்.

நீங்கள் கிரமாமாக இருந்தால் பார்க்கலாம் வேலிக்காட்டில் குப்பை மேனி போன்ற பல தவ்ரங்ககள் வளர்ந்து படர்ந்து இருக்கும்.

அடுத்து இதன் மரம முழுதும் விசம் என்பதும் ஆதாரம் அற்ற விசயமே. முல்குத்தினால் விஷம் என்று யார் சொன்னது. இந்த மரத்தை வெட்டுபவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்.

எனக்கு முல்குத்தியவுடன் இதன் கொழுந்து இலை என்று சொல்வார்கள் அதாவது இதன் முனியில் இருக்கும் பச்சை பசேல் என்று அதை நசுக்கி சாரு போட்டால் உடனே ரத்தம் நிக்கும் வழியும் குறையும். இதை நான் ஏசி அறையில் உட்கார்ந்து கணித்து எழுதவில்லை..என் அனுபவம் ))

அடுத்து இதன் நெத்து விஷம் என்று சொன்னால் நான் இன்னும் உயிரோடு இருப்பதே ஒரு அதிசயம். ஏனென்றால் அது மஞ்சள் வண்ணமாக சதையோடு நீளமாக இனிப்பாக இருக்கும். அதை பிரித்து அதின் விதையோடு சேர்ந்த சதை பகுதியை சுவைத்து இருக்கிறேன். நல்ல சுவையோடு இருக்கும்.அதாவது காய்ந்து நெத்து ஆவதற்கு முன். அதே நேரத்தில் கொஞ்சம் முன் திணறல் புளிப்பாக இருக்கும். அது உதைக்காய்.

உங்களிடம் இருந்து விசயங்ககளை எதிர்பார்க்குறேன். வெறுமனே இரண்டு ஆதரங்களை வைத்து இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி அதை மக்களிடம் பரப்பி இருக்க மாட்டிர்கள என நம்புகிறேன்.

ஒருவேளை எனது கருத்துகள் பொய் ஆகலாம் நீங்கள் எந்த ஆதாரத்தில் எழுதி இருக்கிறிர்கள் என்பதை நான் அறியும் போது.

எனது கருத்துகள் தொடரும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த சீமைக்கருவேல மரங்களைப் பற்றி சில தவறான தகவல்கள் நம்மிடையே உலா வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஆதாரமற்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவிற்கும் அதற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.

இம்மரத்தை களையாகத்தான் கருத வேண்டும். இது நிலத்தடியில் அதிக ஆழத்திற்கு வேர்களைச் செலுத்தி நீரை உறிஞ்சுகிறது. அதனால் அருகில் உள்ள மற்ற மரங்கள் பயிர்கள் பாதிக்கப்படும். மற்றபடி இம்மரம் விஷச்சத்து உள்ளது என்றோ, நிலத்தை பாழ்படுத்துகிறது என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதை முன்பே கவுசல்யா அவர்களின் வலைப்பூவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

தவிர இந்த மரத்தின் இலை/காய்/பழங்களை மிருகங்கள் தின்றால் மலட்டுத்தன்மை வரும், இறந்துவிடும் என்பது தவறான கருத்து, ஆதாரமற்றது.

நீர்நிலைகள் அருகில், விவசாய நிலங்களில் இம்மரங்களை வளரவிடாமல் வைப்பது நல்லதுதான்.

மாறாக எதுவுமே விளைய முடியாத உவர்நிலங்களில் இந்த மரம் மட்டுமே நன்றாக வளர முடிகிறது. அங்கே அது கரிமூட்டம் போட, செங்கல் சூளைக்கு விறகாக என்று பயனும் தருகிறது.

கணேஷ் said...

http://www.researchintouse.com/nrk/RIUinfo/PF/FRP05.htm#L8
இந்த இணைப்பில் இந்த மரம் எப்படி மண்ணுக்கு மட்டும் இல்லாமல் மக்களின் வறுமைக்கும் தீர்வாக இருந்து இருக்கிறது என்பதுக்கு ஆதாரம்.

ஒரு நேரத்தில் (2005-06 முன்னர்)
தடை செய்த Ethiopia அரசு கூட பின் ஏற்பட்ட வறுமையில் இருந்து மக்களை காப்பாற்றிய இந்த மரத்தை பற்றி பின் ஆராய தொடங்கியது. இந்த இனைப்பில் இருக்கும் pdf கோப்புகளை படிக்கவும்
இன்னும் கருத்துகள் தொடரும்..

அதே நேரத்தில் எனது கருத்துகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று தெரியவில்லை அதனால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நீங்கள் வெளியிடும் எனது கருத்துகளில் இருந்தே என்னால் அறிய முடியும்

கணேஷ் said...

சரி இப்போது நீங்கள் சொல்லும் மலட்டுத்தன்மைக்கு வருகிறேன்..

http://www.dfid.gov.uk/r4d/PDF/Outputs/R6953e.pdf

இந்த இனைப்பில் பாருங்கள் மலட்டுத்தன்மைக்கு மருந்தாக இந்த மருந்தையே பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.

நான் அறிய விருபுவது உங்களிடம் இருக்கும் எந்த ஆதாரத்தை வைத்து இதனால் மலட்டுத்தன்மை வரும் என்பதை எழுதினீர்கள்.

இதே இதில் அது எந்த அளவில் ஆடுகளுக்கு பயனளித்தது என்பதையும் தெளிவாக நமது பார்வைக்கு கொடுத்து இருக்கிறார்கள்

ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்போது ஒருவர் மௌனம் காத்தால் என்ன அர்த்தம். அதுவும் என் கருத்துகள இன்னும் வெளியிடாமல்.
இது எனது கருத்தை உங்கள் பதிவோடு இணைத்து வேறு எங்காவது வெளியிட சொல்வதாக எடுத்து கொள்ளலாமா ?? ))

Prabu Krishna said...

வணக்கம் கணேஷ் முதலில் இத்தனை இணைப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

எங்களுடைய இணைப்புகள்.

வேளாண்மையின் பகைவன்
Prosopis juliflora DC.
சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLORA

பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'

உங்களின் மலட்டுத் தன்மை பற்றிய கருத்தில் அதை நேரடியாக தரக்கூடாது என்று சொல்லி உள்ளார்கள். எப்படி தருகிறார்கள் என்று சொல்லவில்லை. எப்படி என்று நான் சொல்லவா?

கருவேல நெற்றுக்களை சேகரித்து அவற்றின் ஓடுகளை நீக்கி விதைகளை அரைத்து கால்நடைகளின் தீவனத்தில் 10 சதவிதம் வரை கலந்து கொடுக்கலாம். ஆடுகள் இதனை அப்படியே சாப்பிட்டால் பல நேரங்களில் செரிமானம் ஆகமால் புழுக்கையில் வெளியேறி விடும். இந்த காய்களில் டானின் என்ற நஞ்சு இருக்கிறது.

இந்த டானின் புரதச்சத்தின் செரிமானத்தை குறைத்து விடும். இதை தவிர்க்க யூரியா (உரக்கடைகளில் கிடைக்கும்) கரைசல் உதவும். காய்களில் மொத்த எடையில் 5 சதவிகிதம் அளவு யூரியாவை தண்ணீரில் கரைத்து காய்களின் மேல் தெளித்து காற்று புகாதபடி 21 நாட்கள் மூடி வைத்து பிறகு காய்களை ஆடுகளுக்கு தரலாம்.


ஒரு கேட்டதை நல்லதாக மாற்ற இன்னொரு நச்சு(உரங்கள் மண்ணை பாழ்படுத்துவது தானே?)

இதில் படருவது ஒரே செடி தான். (சிகப்பு மற்றும் கருப்பு நிறத்தில் சின்னதாய் பாசி மாதிரியான விதை இருக்கும்)அதன் பெயர் தெரியவில்லை. முந்தைய கருத்தில் விளைநிலத்தில் வளர்ந்தால் அடுத்த பயிர் வளர பிரச்சினை இருக்கும் என்றீர்கள் இப்போது வளரும் என்று சொல்கிறீர்கள். இது என்ன முரண்பாடு?

இது விளைநிலத்தில் வளர்க்க வேண்டிய பயிர் இல்லை. அப்படி விளைந்தால் அந்த இடம் விளைநிலமாக இருக்க தகுதியற்று விடும். இது வளர வேண்டிய இடம் பாலைவனம்.

Prabu Krishna said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//இது நிலத்தடியில் அதிக ஆழத்திற்கு வேர்களைச் செலுத்தி நீரை உறிஞ்சுகிறது. அதனால் அருகில் உள்ள மற்ற மரங்கள் பயிர்கள் பாதிக்கப்படும். மற்றபடி இம்மரம் விஷச்சத்து உள்ளது என்றோ, நிலத்தை பாழ்படுத்துகிறது என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. /

இதிலேயே முரண்பாடு உள்ளது. முதலில் விஷம் என்றால் என்ன உடனடியாய் பாதிப்பது மட்டும் தானா? மற்ற பயிர்களை வளர விடாது, அதிக நீரை உறிஞ்சும் இதன் பொருள் என்ன? இது மற்ற பயிர்களை கொல்கிறது தானே? வளரவிடாமல் விடாமல் நிலத்தை பாழ்படுத்துகிறது தானே? அப்போ இதை எப்படி அழைக்க வேண்டும்?

Prabu Krishna said...

நண்பர்களே விவாதிக்க இது இடமில்லை. இதனால் பலனில்லை என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் அதை விட அதிகமாய் தீமைகள் உள்ளதே. அரளிசெடியில் கூடத்தான் விஷத்தன்மை உள்ளது. அதை அழிக்கக் வேண்டும் என்று நாங்கள் போராடவில்லையே.

விறகு என்ற ஒரு விசயத்துக்காக மற்ற சில சிறிய பலன்களை கூறி இதை பணப்பயிர் ஆக்கி விட்டோம். அண்டை மாநிலமான கேரளாவில் இது சுத்தமாக இல்லை என்பதை கவனித்தீர்களா?

வளம் என்பது நம் மாநிலத்தில் இல்லாமல் இல்லை. இதற்கு பயன்படும் நீரை தடுத்து சில ஆக்கப் பூர்வமான பயிர்களை/மரங்களை பயிரிட வேண்டும் என்பது எங்கள் முயற்சி.

இதைப் பற்றி மேலும் சில விஷயங்களை சொன்ன உங்களுக்கு நன்றி.

Kousalya Raj said...

@ராமசாமி.

விக்கிபீடியாவில் இருப்பதே ஆதாரமற்றதா ?! இதனால் மட்டும் தான் இறப்பு என்று பதிவில் குறிபிடப்படவில்லை . முன்பு நீங்கள் சொன்னதும், அந்த அர்த்தத்தில் வந்த வரிகளை நீக்கிவிட்டேன். இந்த வாயு நச்சு தன்மை உள்ளது தான் என்பதை மறுக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். ஒரு சில பயன்கள் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இவை வளர்க்கக்கூடிய இடங்கள் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளோ இல்லை என்பது தான். சமீப காலமாக நிலபகுதிகளை தாண்டி காடு மலைகளை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது,அதனால் அங்கே இருக்கும் நல்ல மரங்கள் பாதிக்கபடுகின்றன, மரங்களின் வளர்ச்சி தடுக்கபடுகிறது. எனவே இதனை கட்டுபடுத்த முயற்சிகள் வேகமாக எடுக்க படவேண்டியது மிக அவசியம்.

வருகைக்கு நன்றிகள்.

Kousalya Raj said...

@@ கணேஷ்...

உனது சமூக அக்கறையும், ஆர்வமும் பிரமிப்பாக இருக்கிறது. தவறான தகவல்கள் பரவி விடுமோ என்பதில் இருக்கும் பதைபதைப்பு கண்டு வியக்கிறேன் :)

நீ கொடுத்த எல்லா லிங்கையும் பொறுமையாக படித்து பதில் சொல்கிறேன் அதற்கு முன் எனக்கு ஒண்ணு புரியல,

//ganesh, 9:41 PM, July 22, 2010
மிக ப்துமையான தகவல்...தூத்துகுடி மாவட்டத்திலும் இது அதிகம் உண்டு...இதைப்பற்றி இப்போதுதான் கேள்விபடுகிறேன்... நல்ல பதிவு நன்றி அக்கா...///

எனது மரங்களை வெட்டுங்கள் பதிவிற்கு நீ கொடுத்த பின்னூட்டம் இது. இந்த மரத்தை பற்றியே இப்போது தான் கேள்வி படுவதாக சொல்லி இருக்கிறாய்.

ஆனால் இப்போது

//என் அனுபவம் )) அடுத்து இதன் நெத்து விஷம் என்று சொன்னால் நான் இன்னும் உயிரோடு இருப்பதே ஒரு அதிசயம். ஏனென்றால் அது மஞ்சள் வண்ணமாக சதையோடு நீளமாக இனிப்பாக இருக்கும். அதை பிரித்து அதின் விதையோடு சேர்ந்த சதை பகுதியை சுவைத்து இருக்கிறேன். நல்ல சுவையோடு இருக்கும்.அதாவது காய்ந்து நெத்து ஆவதற்கு முன். அதே நேரத்தில் கொஞ்சம் முன் திணறல் புளிப்பாக இருக்கும். அது உதைக்காய்.//

இந்த மரத்தோட இவ்வளவு அனுபவம் இருந்தும் அப்போது ஏன் சொல்லவில்லை. முக்கியமாக ஆடு, மாடு மேய்த்தது வரையிலான அனுபவத்தை அப்போதே பகிர்ந்திருக்கலாமே, நானும் தெரிந்து தெளிவாகி இருப்பேன் :)

இந்த நாலு லிங்க் எடுக்க உனக்கு ஒன்னரை வருடம் ஆகி இருக்கிறது...!! :))

ஆதாரங்கள் என்று இந்த லிங்கை பற்றி சொல்வதை விட தகவல்கள், கட்டுரைகள் என்பது சரியாக இருக்கும்.

முன்னுக்கு பின் முரணாக நீ சொன்னதை போன்றுதான் இருக்கும் இப்போது தேடி எடுத்து கொடுத்த லிங்குகளும்...!:)

இருப்பினும் எதையும் தீர ஆலோசிக்கணும் என்பதால் அவசியம் அனைத்தையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுத்து கொள்கிறேன்...களத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிற எங்களுக்கு இவை கண்டிப்பாக உதவும். இந்த உதவி செய்கிற உனக்கு என் நன்றிகள்.

http://www.independent.co.uk/news/world/africa/devil-of-a-problem-the-tree-thats-eating-africa-557911.html

http://vel2vel.blogspot.in/2005/10/blog-post.html

விவாதத்துக்கு வரலையா என்று ஆதங்கபடுவது போன்று உள்ளது உனது பல வரிகள் !! :)

வாழ்த்துக்கள்

Kousalya Raj said...

@ஆல்

நமது நிலம், சுற்றுப்புறம் இதனால் பாழ்படுவதை நேரில் பார்த்து கொண்டிருக்கிறோம், பரந்து விரிந்து தனது கிளைகளை, வேர்களை பரப்பி கொண்டிருக்கும் இதனை கட்டுபடுத்துவது எவ்வாறு என்பதை பற்றி ஆலோசனைகள் சொல்வதை விட்டு விட்டு அம்மரத்திற்கு பரிந்து பேசி எதை நிரூபிக்க போகிறோம் ?!

ஆகாய தாமரை தாவரம் நாற்காலிகள் செய்ய பயன்படுத்த படுகிறது என்பதற்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கெடுத்து கொண்டிருப்பதை நல்லது என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?!

சமூக அக்கறை இருப்பின் தங்கள் கருத்தை , ஆலோசனைகளை கூறுங்கள் களப்பணியை முன்னெடுத்து செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கும். விவாதத்தை இங்கே தவிருங்கள் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்