எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Monday, January 30, 2012
பசுமை வணக்கங்கள் 

பசுமை விடியல் இயக்கம் இணையத்தில் பல உறவுகளுடன் கைகோர்த்து தகவல்களை பரிமாறி வருகிறது. இயக்கம் மேற்கொள்ளும் அத்தனையிலும் 'நாங்கள் துணை நிற்ப்போம்'என தங்களது மெயிலின் மூலம் ஆதரவு கொடுத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றிகள். 

கூட்டு முயற்சி இல்லாமல் வெற்றி, சாதனை என்பது சாத்தியமில்லை. எந்த ஒரு தனிமனித சாதனைக்கு பின்னாலும் பலரின் பங்களிப்பு நிச்சயம் உண்டு. அப்படி ஒரு பங்களிப்பை நம் மண்ணின் சுற்றுப்புற பாதுகாப்புக்காக பலரும் தரவேண்டும் என்பதே உங்களிடம் எங்களின் வேண்டுகோள்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாங்கள் களப்பணிகளை ஆற்ற திட்டங்கள் வகுத்து வருகின்றோம். அதன் முதல் படியாக தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை (VOLUNTEERS)  இணைத்துக்கொண்டு முழு வீச்சில் பணிகளை மேற்கொள்வது ஒன்றே சரியான வழிமுறை என கருதுகிறோம். 

உங்களுடன் எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்...1. எப்படி இணைவது ?

    Join with us என்று இத்துடன் இணைத்திருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, இணைந்து கொள்ளவேண்டும்.

2. பசுமை போராளிகள் என்று எங்களை எப்படி பிறர் முன் அடையாள படுத்திக்கொள்வது?

   நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி பொறித்த ஐடி கார்டும் , பாட்ஜ் மற்றும் தகவல்கள் அடங்கிய கையேடு, சிடி முதலியன உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

3. என்ன என்ன வேலைகள் ?

    வேலைகள் என்று சொல்வதை விட சேவைகள் என கூறலாமே...!

இயக்கம் தொடர்பான சந்திப்புகள் உங்கள் ஊரில் நடக்கும் போது கலந்து கொள்ளவேண்டும்.

இயக்கத்தின் சார்பில் உங்களது ஊரில் நடத்த படும் சேவை தொடர்பான நிகழ்வுகளில் தவறாமல் பங்கு கொள்ளவேண்டும்.

உங்கள் பகுதி மக்களுக்கு இயக்கம் தொடர்பான செய்திகளை பகிர்வது, புரியவைப்பது

  4. சேவைக்கென எத்தனை மணிநேரம் ஒதுக்கவேண்டும்? 

  மேற்கொள்ள போகும் சேவையை பொறுத்து நேரம் மாறுபடலாம். குறிப்பிட்ட வேலை நேரம் என்பது கிடையாது, உங்களின் ஓய்வு தினத்தை கணக்கில் கொண்டே வேலை நேரம் ஒதுக்கப்படும். அதுவும் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேர வேலை என்ற அளவில் தான் இருக்கும்

  வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை என்றளவில் இருக்கலாம். இதை குறித்து உங்களுடன் ஒரு கலந்துரையாடல் இருக்கும் அப்போது இதை குறித்தான உங்களின் ஆலோசனைகளையும் சேர்த்து   நிர்ணயம் செய்து கொள்வோம்.

  5. பணம் செலவு செய்ய வேண்டியது இருக்குமோ?
     
  நிச்சயமாக இல்லை. உங்களின் உற்சாகமான ஒத்துழைப்பு மட்டுமே எங்களுக்கு தேவை. ஏற்படக்கூடிய போக்குவரத்து செலவு , உணவு போன்ற எது ஒன்றாக இருப்பினும் நிர்வாகம் கொடுத்து விடும்.

  7. ஒரு ஊரில் எத்தனை நபர்கள் வரை இணையலாம். 

  எத்தனை பேரும் இணையலாம். சுயநலமற்ற சேவை உள்ளம் மட்டுமே தேவை. 

  8. நிர்வாகிகளை எவ்வாறு தொடர்பு கொள்வது ?

  அலைபேசி எண்கள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். சேவை குறித்து 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

  வேறு கேள்விகள் ஏதும் இருப்பின் Please mail  to admin@pasumaividiyal.org 

  துடிப்புமிக்க இளைஞர்களே !

  இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்...ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்? உங்கள் உதவி தான் வேண்டும் எங்களுக்கு...!!

  இந்த பசுமைச் செடிக்கு உங்கள் நேரத்தை கொஞ்சம் மட்டும் நீராய் ஊற்றுங்கள். நாளை வளர்ந்து நின்று இந்த பூமிதனை பசுமைக் குடையால் காக்கும். 

  "தனியாக இருக்கும் போது நாம் ஒரு துளி, ஒன்றாய் இணைந்தால் கடல் ! எல்லோரும் இணைந்து ஒரு இலக்கு நோக்கி பயணிக்கும் போது வெற்றி தானே வந்து சேருகிறது" - ஹென்றி போர்டு

  'புதிய பாரதம் படைப்போம்' அல்ல அல்ல 'பசுமை பாரதம் படைப்போம்' பசுமைவிடியலில் இணைவோம்...நாளைய விடியலின் கதிர்களாவோம் !!

   'எங்களுடன் இணைய' பக்கம் செல்ல இந்த இணைப்பை சுட்டவும்...


  நன்றி
  பசுமை விடியல் நிர்வாகம்


  2 comments:

  திண்டுக்கல் தனபாலன் said...

  நல்ல பகிர்வு ! வாழ்த்துக்கள் !
  வலைச்சரம் மூலம் (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_07.html) உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
  Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

  Unknown said...

  உதவும் உள்ளங்கள் பல, யாருடன், எப்படி கை கோர்த்து செல்வது என்று தவிக்கிறார்கள். எனவே, நானும், உங்களுடன் இணைந்து செல்ல விரும்புகிறேன்.