எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Thursday, January 19, 2012
இணையத்தில் இணைந்த பசுமைப் போராளிகள், நேரில் சந்தித்தால்? ஆம் முதல் முறையாக பசுமை விடியல் நிர்வாகிகள் சென்னையில் நேற்று (18-01-2012) கலந்துரையாடினோம் . பசுமை விடியலின் சில வருங்கால நிகழ்வுகளை முடிவெடுக்கும் இடமாக அமைந்தது அந்த சந்திப்பு. 

சில முடிவுகள் உங்கள் பார்வைக்கு...... 

  1. முதல் முயற்சியாக நம் விவசாயிகளின் வாழ்க்கையை வறட்சியாக்கும், சீமை கருவேல மரத்தை அடியோடு அழிக்கும் செயல் தீர்மானிக்கப்பட்டது. 

  2. இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் படிப்படியாக கொண்டு செல்ல  வேண்டும். 

  3. இதற்கு முக்கிய செயலாக இது குறித்து ஒரு ஆவணப் படம் உருவாக்குதல் அவசியம் என்று முடிவெடுக்கப்பட்டது. 

  4. செயலில் முதல்படி பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் NSS, NCC, SCOUT மற்றும் இதர அமைப்புகள் மூலம் இதை அழிக்கும் முயற்சியை தொடங்க வேண்டும். 

  5. இதை அழிக்கும் போது, இதற்கு மாற்று என்று ஒன்றை சொல்ல வேண்டியது அவசியமாகிறது. ஒரு மாற்றாக சவுக்கு மரம்(அலையாத்தி) இருக்கும் என்று நம்பப்படுகிறது.

  6. பசுமை விடியல் தளத்தின் ஆங்கில பக்கத்தை நிர்வகிக்க திரு. ஷாஜஹான் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். 
பேசிய அனைத்து முடிவுகளும் அனைவராலும் ஏற்றுகொள்ளபட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஒரு மிகப் பெரிய செயலில் இறங்கி உள்ளது எங்கள் இயக்கம். கூடிய விரைவில் செயல் வீரர்களாக இதில் இறங்க காத்திருக்கிறோம். 

- பசுமை விடியல் குழு. 

7 comments:

அம்பலத்தார் said...

வணக்கம் பசுமை போராளிகளே! மிகவும் நல்ல விடயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Rathnavel said...

வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

vaalththukkal

krish2rudh said...

may I help you?

ராமகிருஷ்ணன் said...

பள்ளி , கல்லூரி மாணவர்களிடம் இயற்கை நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சரியாக எடுத்து சொல்லி அதை புரியவைத்தால் எளிதாக இதன் நோக்கம் நிறைவேறும்

shunmuga said...

வாழ்த்துக்கள் !

INDIAN said...

Congrats.... Let's Together WE Can Make a Green World...